சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில், ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் ஆலம்கீர் ஆலமை அமலாக்கத் துறையினர் நேற்று கைது செய்தனர்.
ஜார்க்கண்டில் முதல்வர் சம்பயி சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா -காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அதில், மாநில ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சராக காங்கிரஸ் எம்எல்ஏ ஆலம்கீர் ஆலம் (70) பதவி வகித்து வருகிறார்.
இவரை பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அவருடன் தொடர்புடைய இரு நபர்களின் வீட்டில் இருந்து ரூ.34.50 கோடியை அமலாக்கத்துறை பறிமுதல் செய்ததன் தொடர்ச்சியாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.