நடிகர் விஜய் தற்போது தி கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம், வரும் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு பிறகு, இயக்குநர் எச்.வினோத்தின் கூட்டணியில், புதிய படம் ஒன்றில் அவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இப்படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்று முதலில் தயாரிக்க இருந்தது. ஆனால், சில பிரச்சனைகளின் காரணமாக, அந்த தயாரிப்பு நிறுவனம் தளபதி 69 பிராஜக்டில் இருந்து விலகிவிட்டது.
இதற்கான காரணம் என்னவென்று, தற்போது தகவல் ஒன்று பரவி வருகிறது. அதாவது, நடிகர் விஜய் இப்படத்திற்காக, ரூபாய் 250 கோடி சம்பளமாக கேட்டாராம்.
இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக கொடுக்க மனம் இல்லாத நிறுவனம், விஜயிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாம்.
இதில் சுமூகமான முடிவு எட்டப்படாததால், அந்நிறுவனம் வெளியேறிவிட்டதாக சொல்லப்படுகிறது.