ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிறுவனர் தான் நரேஷ் கோயல். இவர், பணச் சலவை செய்யப்பட்ட குற்றச்சாட்டிலும், கனரா வங்கியிடம் இருந்து பெறப்பட்ட ரூ.538.62 கோடி கடனை மோசடி செய்த வழக்கிலும், அமலாக்கத்துறையால், கடந்த 2023-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவரது மனைவி அனிதா கோயல் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டிருந்தார். ஆனால், இவரது வயது மற்றும் மருத்துவ நிலையை ( புற்றுநோய் இருப்பதால் ) கணக்கில் கொண்டு, கைது செய்யப்பட்ட அதே நாளில், நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது.
இந்நிலையில், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அனிதா கோயல், சிகிச்சை பெற்று வந்தார்.
இன்று சிகிச்சை பலன் இன்றி, அதிகாலை 3 மணிக்கு காலமானார். புற்றுநோய்க்கு எதிராக பல நாட்களாக போராடி வந்த நிலையில், இன்று அவர் இயற்கை எய்தினார்.
அவரது இறுதி சடங்கு, இன்று நடத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.