கேரள மாநிலத்தில் சில நாட்களாகவே பல்வேறு காய்ச்சல்கள் பரவி வருகின்றன. இதன் காரணமாக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மழைக்காலம் துவங்கியதால் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கேரளாவில் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் காரணமாக கடந்த 2 வாரங்களில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.