அஜித்துக்காக சத்தியத்தை மீறும் விஜய்சேதுபதி?

விடாமுயற்சி படத்திற்கு பிறகு, நடிகர் அஜித் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க உள்ளார். ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ள இப்படம், வரும் பொங்கல் பண்டிகை அன்று ரிலீஸ் ஆக இருப்பதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்திற்கான பின்னணி பணிகளில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், அஜித்துக்கு வில்லனாக நடிப்பதற்கு, நடிகர் விஜய்சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒத்துக்கொண்டால், விஜய்சேதுபதியும், அஜித்தும் நடிக்கும் முதல் படமாக இது இருக்கும்.

ஆனால், இனிமேல் வில்லன் மற்றும் சிறப்புத் தோற்றங்களில் நடிக்க மாட்டேன் என்று விஜய்சேதுபதி சமீபத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News