மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் இயங்கி வரும் பிரபல ஹோட்டல் ஆதி தங்கும் விடுதியில் உள்ள ஸ்ரீ ஹோட்டல் ஆனந்தபவன் சைவ உணவகத்தில் மூவலூர் பகுதியை சேர்ந்த சுந்தர் தனது 12 வயது மகள் சிவப்பிரியை மற்றும் குடும்பத்தினருடன் உணவு அருந்தி உள்ளார்.
மகளுக்கு பன்னீர் பரோட்டா ஆர்டர் செய்து வாங்கி கொடுத்துள்ளார். பன்னீர் பரோட்டாவை சிறுமி சாப்பிடும் போது முழு கரப்பான் பூச்சி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி சிவப்பிரியை அங்கே வாந்தி எடுத்துள்ளார்.
உணவகத்தில் ஈக்கள் அதிகமாக மொய்ப்பதாகவும் பூனை சுற்றி வருவதாகவும் பெற்றோர்கள் குற்றச்சாட்டு வைத்தனர்.
மேலும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடனடியாக உணவகத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.