10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு, சிறப்பு பரிசு வழங்கும் விழாவை, நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், சென்று ஆண்டு நடத்தியிருந்தார்.
இந்த கல்வி விழா, இந்த ஆண்டும் நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு நடக்க உள்ள விழாவில், சில புதுமைகளை செய்ய தளபதி விஜய் முடிவு செய்துள்ளாராம்.
அதாவது, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது.
இதில், ஒரே மதிப்பெண்களை இரண்டு மாணவர்கள் பெற்றிருந்தால், தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவருக்கு அந்த பரிசு வழங்கப்பட உள்ளதாம்.
இதுமட்டுமின்றி, ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள், உயர்கல்வி தொடர உதவி செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் சாதித்த திருநங்கை மாணவர்களுக்கும், விஜய் பரிசு வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.