த்ரிஷா அழகிற்கு இதுதான் காரணமா? வைரலாகும் த்ரிஷா அம்மாவின் புகைப்படம்!

மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக அறிமுகமானவர் த்ரிஷா. இந்த படத்திற்கு பிறகு, அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என்று பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இவர் இணைந்து நடித்துள்ளார்.

இன்றும் மார்கெட் குறையாத இவர், அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். இதற்கு, இவரது நடிப்புத் திறமை ஒரு காரணமாக இருந்தாலும், இன்றும் இளமை மாறாத இவரது தோற்றமும் முக்கிய காரணமாக இருந்து வருகிறது.

த்ரிஷா இவ்வளவு அழகாகவும், இளமையாகவும் இருப்பதற்கு காரணம் என்னவென்று தற்போது தெரியவந்துள்ளது. அதாவது, நடிகை த்ரிஷா தாயின் புகைப்படம், இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், த்ரிஷாவின் தாயின் அழகை பாராட்டி வருகின்றனர். அவரது தாயின் அழகு தான், தற்போது த்ரிஷாவிடம் உள்ளது என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News