ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி நேற்று புதிதாக கட்டப்பட்ட அணை திறப்பு விழாவிற்கு அசர்பைஜான் சென்றார்.
அவருடன் அசர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியோவ், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் உசைன் மற்றும் மூத்த அதிகாரிகள் ஹெலிகாப்டரில் பயணித்தனர்.
ஈரான் அதிபர் இப்ராஹின் ரெய்சி சென்ற ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகின.
இந்த விபத்து ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து சுமார் 600 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஜோல்ஃபா என்ற நகரத்தின் அருகே விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஈரான் அதிபர் இப்ராஹின் ரைய்சி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிபருடன் ஹெலிகாப்டரில் பயணித்த வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட 8 பேரும் விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.