அதிர்ச்சி தந்த கார்த்திக் குமார்! ஆடிப்போன சுசித்ரா!

சுஜி லீக்ஸ் என்ற சர்ச்சையில் சிக்கி, தனது வாழ்க்கையில் பெரும் பிரச்சனைகளை சந்தித்தவர் பாடகி சுசித்ரா. இவர் சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

அந்த பேட்டியில், தனது முன்னாள் கணவரும், நடிகருமான கார்த்திக் குமார் குறித்தும், நடிகர் தனுஷ் குறித்தும், பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

இதுதொடர்பான Youtube வீடியோ இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், பாடகி சுசித்ராவுக்கு கார்த்திக் குமார் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அந்த நோட்டீஸில், சுசித்ரா பேட்டியில் கூறிய அனைத்து தகவல்களும் பொய் என்றும், இவ்வாறு பேட்டி அளிப்பதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதாம்.

இந்த வக்கீல் நோட்டீஸ்-க்கு, சுசித்ரா என்ன பதில் அளிப்பார் என்பதை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

RELATED ARTICLES

Recent News