கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி, திருமண நிகழ்வு ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு, பான் மசாலாவுடன் சேர்த்து, திரவ நிலை நைட்ரஜன் வழங்கப்பட்டுள்ளது.
இதனை சாப்பிட்ட சில நிமிடங்களில் அலறிய அந்த சிறுமியை, உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு, சிறுமியை பரிசோதனை செய்ததில், அவருக்கு வயிற்றில் துளை ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
அதாவது, உள்வயிற்றுப் பகுதியின் சில பகுதிகளில், 4*5செ.மீ என்ற அளவில் துளை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஸ்லீவ் காஸ்ட்ரெக்டோமி என்ற அறுவை சிகிச்சை, அந்த சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்பிறகு, 2 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த இவர், 6 நாட்களுக்கு பிறகு, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம் குறித்து பேசிய மருத்துவ நிபுணர்கள், இதே மாதிரியான சம்பவங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், பதிவாகி வருகிறது என்றும், இதுதொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவைப்படுகிறது என்றும் கூறினார்.
மேலும், உணவுப் பொருட்களில் லிக்விட் நைட்ரஜனை பயன்படுத்துவதில் உள்ள ஆபத்துகள் குறித்தும், அவர்கள் எச்சரித்தனர்.