ஐ.பி.எல் போட்டியின் கடைசி லீக் போட்டி, ஆர்.சி.பி அணிக்கும், சி.எஸ்.கே அணிக்கும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்தது. பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்த போட்டியில், முதலில் பேட்டிங் விளையாடிய ஆர்.சி.பி, 218 ரன்கள் எடுத்திருந்தது.
219 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி, 191 ரன்கள் மட்டுமே எடுத்து, 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆனால், கடைசி ஓவரின் முதல் பந்தில், தோனி சிக்ஸ் அடித்ததும், ஒட்டுமொத்த ஆா்.சி.பி ரசிகர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனால், அதன்பிறகு சிறப்பாக பந்து வீசிய யாஷ் டாயல், அணியை வெற்றிப் பாதைக்கு எடுத்துச் சென்றார். இந்நிலையில், இந்த போட்டியின் இறுதியில், எம்.எஸ்.தோனி ஜெண்டில் மேனாக நடந்துக் கொள்ளவில்லை என்று விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
அதாவது, ஒரு போட்டி முடிந்த பிறகு, வெற்றிப் பெற்ற அணிக்கு, கைக் குலுக்கி வாழ்த்து சொல்வது என்பது, கிரிக்கெட் போட்டியின் மரபு. ஆனால், சனிக் கிழமை நடந்த போட்டியின்போது, ஆா்.சி.பி வெற்றி பெற்றதும், உடை மாற்றும் அறைக்கு தோனி விரைந்து சென்றுள்ளார்.
இதுதொடர்பான வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ள சில நெட்டிசன்கள், அவரை விமர்சித்து வருகிறது.
இதுகுறித்து பேசிய பதிவில், “தோல்வியை எப்படி கையாள வேண்டும் என்பதை, கோலியிடம் இருந்து தோனி கற்றுக் கொள்ள வேண்டும். கைக் குலுக்குதல் என்பது, கிரிக்கெட் போட்டியின் சிறப்பான அம்சங்களில் ஒன்று. இதே விஷயத்தை விராட் கோலி செய்திருந்தால், பலரும் அவரை ஈகோப் பிடித்தவர் என்று விமர்சித்திருப்பார்கள். எம்.எஸ்.தோனியிடம் இருந்து இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என்று, நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார்.