மனிதன் மேற்கொள்ளும் சில வித்தியாசமான முயற்சிகள் மூலம் தான், இந்த உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த முயற்சிகள் நின்று போனால் உலகமே நின்று போய்விடும். அந்த வகையில், தற்போதும் விஞ்ஞானிகள் புதிய வித்தியாசமான ஆராய்ச்சி ஒன்றை நடத்தியுள்ளனர்.
அந்த ஆராய்ச்சியின் முடிவுகள், பெரும் ஆச்சரியமான முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதாவது, ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி ஜோசப் திதுரி. இவர் அட்லாண்டிக் கடலின் ஆழத்தில் 3 மாதங்களுக்கு தங்குவதற்கு, விஞ்ஞானிகளால் கேட்கப்பட்டுள்ளார்.
அதிகபட்ச அழுத்தத்தில் மனிதன் வாழும்போது, அவனது உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை ஆராய்வதற்காக தான், விஞ்ஞானிகள் இந்த முடிவை எடுத்தனர். அவர்களது முடிவுக்கு ஒத்துக் கொண்ட ஜோசப் திதுரி, அட்லாண்டிக் கடலின் ஆழத்தில், 93 நாட்கள் தங்கியுள்ளார்.
பின்னர், மீண்டும் கடலின் மேற்பரப்புக்கு வந்த அவரை, விஞ்ஞானிகள் பரிசோதனை செய்துள்ளனர்.
அதில், DNA-வில் அவரது வயது குறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தவிர, ஜோசப்பின் ஸ்டெம் செல்லின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், அவரது ஒட்டுமொத்த உடல்நலனும் மேம்பட்டிருப்பதாகவும், விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மேலும், இவரது தூங்கும் தரம் உயர்ந்திருப்பதாகவும், கொலஸ்ட்ரால் அளவு 72 பாய்ண்டுகளில் குறைந்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இந்த மாற்றத்திற்கு, கடல் ஆழத்தில் இருந்த அழுத்தம் தான் காரணம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இதுமாதிரியான அனுபவங்கள் ஏன் தேவை என்பது குறித்து பேசிய ஜோசப் திதுரி, “வெளி நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும் வகையிலான இதுமாதிரியான இடங்கள், உங்களுக்கு தேவை. இரண்டு வார விடுமுறைக்கு, மக்களை இதன் உள்ளே அனுப்பி வைக்க வேண்டும். அந்த இடத்தில், அவர்கள் ரிலாக்ஸ் ஆக இருப்பார்கள்” என்று கூறினார்.
மேலும், தன்னுடைய மெட்டபாலிசம் அளவு மேம்பட்டிருப்பதாக கூறினார்.தொடர்ந்து, ஆழ்கடலில் தனக்கு நடந்த அனுபவங்கள் குறித்து விவரித்த அவர், “வாரத்தில் 5 நாட்களுக்கு, Exercise Band-ஐ வைத்து ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வேன்” என்றும் கூறினார்.
இதற்கு முன்னர், வேறொரு நபர் 73 நாட்கள் கடலுக்கு அடியில் இருந்து உலக சாதனை படைத்திருந்தார். அவரது சாதனையை தற்போது 93 நாட்கள் தங்கி, ஜோசப் திதுரி முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.