பொய்யான புகார் கொடுத்து போலீசிடம் வசமாக சிக்கிய பாஜக பிரமுகர்..!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த அன்னூர் சொக்கம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். பா.ஜ.க பிரமுகரான இவரது வீட்டில் நேற்றைய முன்தினம் ரூ. 1.5 கோடி பணம் மற்றும் 9 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்க பட்டதாக அன்னூர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்த தொடங்கினர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது அங்கு சந்தேகத்துக்கிடமான நபர் ஒருவர் வந்து சென்றது தெரியவந்தது. அந்த நபரை கைது செய்த காவல் துறையினர் அன்னூர் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த நபர் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அன்பரசன்(33) என்பது தெரியவந்தது. விஜயகுமாரின் வீட்டை நோட்டமிட்ட அன்பரசன் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.18.50 லட்சம் மற்றும் ஒன்பது சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது.

இதனையடுத்து குற்றவாளியிடம் இருந்து ரூ.18.50 லட்சம் ரொக்கம் மற்றும் ஒன்பது சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்த காவல் துறையினர் அன்பரசன் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் அன்பரசன் மீது ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது.

பொய்யான தகவல்களை கூறி காவல் துறையினரை அலைக்கழித்தாக பா.ஜ.க பிரமுகர் விஜியகுமார் மீது நீதிமன்ற உத்தரவுப்படி இரண்டு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES

Recent News