தேர்தல் ஆணையம் தோல்வி அடைந்துவிட்டது….கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிருப்தி

திரிணமூல் கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து மேற்கு வங்க பத்திரிகைகளில் பாஜக விளம்பரம் வெளியிட்டிருந்தது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் மே 5ஆம் தேதி புகார் அளித்த திரிணமூல் காங்கிரஸ், உண்மைக்கு புறம்பான, நிரூபிக்கப்படாத பொய் புகார்களை விளம்பரமாக பாஜக வெளியிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தெரிவித்திருந்தது.

இதற்கு தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. குறிப்பிட்ட நேரத்தில் திரிணமூல் காங்கிரஸ் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் ஆணையம் பெரும் தோல்வி அடைந்துள்ளதாகவும், வாக்குப்பதிவுக்கு பிறகு புகாரை தீர்ப்பது நீதிமன்றத்தின் வேலை இல்லை என்றும் விமர்சித்தார்.

திரிணமூல் காங்கிரஸுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முற்றிலும் போட்டியாளர்களை அவமதிக்கும் விதமாகவும், தனிப்பட்ட தாக்குதல்களை கொண்டதாகவும் உள்ளது. மறு உத்தரவு வரும் வரை திரிணமூல் காங்கிரஸ் குறித்து அவதூறு விளம்பரங்களை வெளியிட பாஜகவுக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News