அஜித் தற்போது குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில், அஜித்தின் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
இந்த காட்சி எடுக்கப்பட்டபோது பணியாற்றிய 700 பணியாளர்கள், அஜித்துடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளனர். அஜித்தின் லுக் இணையத்தில் கசிந்துவிடும் என்பதால், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்டு, 700 பணியாளர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆனால், புதிய ஐடியா ஒன்றை கொடுத்து, அந்த பிரச்சனையை அஜித் சரி செய்துள்ளார்.
அதாவது, “படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை உடனே ரிலீஸ் செய்துவிடுங்கள். அப்படி செய்துவிட்டால், எந்த பிரச்சனையும் ஏற்படாது.
பணியாளர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளட்டும்” என்று அஜித் கூறியுள்ளாராம். இதனால், வேறொரு தேதியில் தாமதமாக ரிலீஸ் ஆக வேண்டிய இந்த போஸ்டர், மிக விரைவிலேயே ரிலீஸ் ஆகியுள்ளது.