இது உங்க நூறாவது திருட்டு ஆண்டவரே….திருட்டு வழக்கில் 100 வது முறையாக சிறைக்கு செல்லும் நபர்

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த சபிர் அஹமது என்பவர் நேற்று பேருந்தில் பயணித்து கொண்டிருந்த போது இவரது செல்போனை ஒரு நபர் திருடிவிட்டு பேருந்தில் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார். இதனை அறிந்த சபிர் உடனிருந்தவர்கள் உதவியுடன் தப்பிக்க முயன்ற நபரை மடக்கி பிடித்து கடைவீதி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அதனையடுத்து தப்பிக்க முயன்றவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவ்ர் செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (53) என்பதும் ஏற்கனவே அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலிசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவர் திருட்டு வழக்கில் நூறாவது முறையாக சிறைக்கு செல்பவர் என கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News