Connect with us

Latest Tamil News, Tamil Nadu News Today, இன்றைய செய்திகள்

விழா மேடையிலேயே சிவகார்த்திகேயன் மானத்தை வாங்கிய பிரபல நடிகை!

சினிமா

விழா மேடையிலேயே சிவகார்த்திகேயன் மானத்தை வாங்கிய பிரபல நடிகை!

சூரி, சசிகுமார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் கருடன். எதிர்நீச்சல், கொடி ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் தான், இப்படத்தையும் இயக்கி முடித்துள்ளார்.

வரும் 31-ஆம் தேதி அன்று, இப்படம் வெளியாக உள்ள நிலையில், டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகை வடிவுக்கரசி, மேடையில் உரையாற்றினார்.

அப்போது, “நான் பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துவிட்டேன். ஆனால், சிவகார்த்திகேயனுடன் மட்டும் இணைந்து நடிக்கவே இல்லை.

அவரது படத்தில் நடிப்பதற்கு பலமுறை வாய்ப்பு கேட்டேன். வாய்ப்பு தருகிறேன் என்று கூறும் அவர், ஒரு முறைகூட வாய்ப்பு கொடுத்ததே இல்லை என்று தெரிவித்தார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிவகார்த்திகேயன், வடிவுக்கரசியின் கைகளை பிடித்துக் கொண்டு, “அடுத்த திரைப்படத்தில் நிச்சயம் நடிப்பீர்கள்” என்று வாக்குறுதி அளித்தார்.

More in சினிமா

To Top