நான் மனித பிறவியே கிடையாது – ஒடிசாவில் பிரதமர் மோடி பேட்டி

ஒடிசாவின் பூரியில் பிரதமரின் ரோட்ஷோவுக்குப் பிறகு பாஜக மூத்த நிர்வாகி சம்பித் பத்ரா செய்தியாளர்களிடம் பேசும் போது ஜகந்நாதர் பிரதமர் நரேந்திர மோடியின் பக்தர் என்று கூறியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது கடவுளே மோடியின் பக்தர்தான் என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஒடிசாவில் பழங்காலமாக வணங்கப்படும் தெய்வமான ஜெகநாதரைப் பற்றிய அவரின் இந்த கருத்து கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) இதற்கு கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி ஒடிசாவில் ஊடகத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: நான் மனித பிறவியாக இருக்க வாய்ப்பு இல்லை, நான் பயாலஜி ரீதியாக பிறந்திருக்க வாய்ப்பு இல்லை. என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார் என அவர் பேசியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News