திருப்பூரில் பாஜக நிர்வாகி முருகேசன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் சுந்தரமூர்த்தி என்பவர் வாடகைக்கு எடுத்து பனியன் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். போதிய ஆர்டர்கள் இல்லாததால் சுந்தரமூர்த்தி ஒரு மாதம் வாடகை தரவில்லை.
இதையடுத்து சுந்தரமூர்த்தி வாடகை தராததால் பனியன் நிறுவனத்தின் பூட்டை உடைத்து அங்கிருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள 30 தையல் இயந்திரங்களை முருகேசன் எடுத்து விற்றுள்ளார்.
இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரில் பாஜக ஐ.டி. பிரிவு நிர்வாகி முருகேசனை போலீசார் கைது செய்தனர்.