பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை என்று தொடர் வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் வெற்றிமாறன். இவர் தற்போது விடுதலை படத்தின் 2-ஆம் பாகத்துக்கான பணியில், மிகவும் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்த படத்தை முடித்த பிறகு, சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற படத்தை தொடங்கலாம் என்று வெற்றிமாறன் முடிவு செய்திருந்தார். ஆனால், அதற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்து இப்போது வரை, எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் மீது, நடிகர் சூர்யா கடும் கோபத்தில் இருப்பதாக, பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். அதற்கு காரணம் என்னவென்றால், செல்லும் இடங்களில் எல்லாம், விஜயை பற்றி வெற்றிமாறன் புகழ்ந்து பேசி வருகிறாராம்.
இது, சூர்யாவுக்கு பிடிக்கவில்லையாம். இதுமட்டுமின்றி, சூர்யாவின் வாடிவாசல் படத்தின் கதையை, தெலுங்கு நடிகர் ராம் சரணிடம் வெற்றிமாறன் கூறியிருக்கிறாராம். இந்த விஷயத்தையும் அறிந்த சூர்யா, மிகவும் ஆவேசத்துடன் இருப்பதாக சொல்லப்படுகிறது.