பாஜக வேட்பாளர் மீது கற்களை வீசி தாக்குதல்: ஓட ஓட விரட்டிய மர்ம நபர்கள்!

மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20 ஆகிய தேதிகளில் 5 கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ளன.

தற்போதைய மக்களவைத் தேர்தலில் 6-ஆம் கட்டமாக உத்தர பிரதேசத்தில் 14, ஹரியாணாவில் 10, பிகார், மேற்கு வங்கத்தில் தலா 8, டெல்லியில் 7, ஒடிஸாவில் 6, ஜார்க்கண்டில் 4, ஜம்மு -காஷ்மீரில் 1 என 58 தொகுதிகளில் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது.

இதில் மேற்கு வங்கத்தில் சில இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் ஜார்கிராம் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரணாத் துடு மோங்க்லபோட்டா வாக்குச்சாவடிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது திடீரென சில மர்ம நபர்கள் அவர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து அங்கு அவரை மத்திய பாதுகாப்பு படையினர் தடுப்புகளை அமைத்து காப்பாற்ற முயன்றனர்.

ஆனால் பல்வேறு திசைகளில் இருந்தும் கற்கள் சீறி வந்ததோடு ஒரு கட்டத்தில் கும்பலாக சேர்ந்து கொண்டு வேட்பாளர் பிரணாத்தை தாக்கத் தொடங்கினர்.

இதனையடுத்து வேறு வழியின்றி அங்கிருந்து அவர் ஓட்டம் பிடித்தார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News