ஜாமீனை நீட்டிக்கக் கோரி கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனு!

இடைக்கால ஜாமீனை மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்க கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டு குற்றச்சாட்டில் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலக்கத்துறையால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து தனது கைதுக்கு எதிராகவும், தேர்தல் பரப்புரைக்காகவும் இடைக்கால ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார்.

அதனை விசாரித்த உச்சநீதிமன்றம்,
தேர்தல் பரப்புரைக்காக ஜூன் 1 வரை இடைக்கால ஜாமின் வழங்கியது.

இந்நிலையில் அதனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு உச்சநீதிமன்ற கோடைவிடுமுறை கால சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News