இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்.. 30 பாலஸ்தீனியர்கள் பலி..

இஸ்ரேல் ராணுவத்திற்கும், ஹமாஸ் என்ற அமைப்புக்கும் இடையே, பல மாதங்களாக போர் நடந்து வருகிறது. இந்த போரில், இரண்டு தரப்பிலும் பல்வேறு உயிர்கள் பறிபோகியுள்ளன.

இருப்பினும், இரண்டு தரப்பும் சமாதான பேச்சுவார்த்தைக்கு உடன்படாததால், போர் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில், தெற்கு காஸா பகுதியில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில், 30-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதலில், 12-க்கும் மேற்பட்ட மற்ற நபர்கள், படுகாயம் அடைந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. ரஃபா பகுதியில் ரெட் க்ராஸின் சர்வதேச கமிட்டி மூலமாக நடத்தப்படும் மருத்துவமனையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மேலும், மற்ற சிகிச்சைகள் பெறும் நோயாளிகளின் எண்ணிகையும் அதிக எண்ணிக்கையில் உள்ளது. இதற்கிடையே, இஸ்ரேல் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள், ஆபத்தான சூழ்நிலையில் இருப்பதால், மருத்துவர்கள் உயிரிழந்தவர்களின் இறுதிக்கட்ட எண்ணிக்கையை இன்னும் உறுதி செய்யாமல் உள்ளனர்.

இந்த தாக்குதல் குறித்து பேசிய ஹமாஸ் அமைப்பினர், இது குடிமக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலை தாக்குதல் என்றும், இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும், கூறி வருகின்றனர்.

இதற்கு முன்னர் கருத்து கூறிய இஸ்ரேல், “ரஃபாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்க வேண்டும். மேலும், அப்பகுதியில் உள்ள தங்களது பினைக்கைதிகளை மீட்க வேண்டும்” என கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News