ஊசியை விழுங்கிய சிறுமி: அறுவை சிகிச்சை இன்றி காப்பாற்றிய டாக்டர்கள்!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி தான் உடை அணியும் போது தவறுதலாக ஊசியை (பின்) விழுங்கியதன் காரணமாக அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அச்சிறுமியின் பெற்றோர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

உடனடியாக சிறுமியை பரிசோதித்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் அருண், உடையில் குத்தப்படும் பின் ஊசி நுரையீரலில் சிக்கி இருப்பதை கண்டறிந்தார்.

பின்னர் சிறுமியின் நுரையீரலில் சிக்கியிருந்த 4 செமீ
அளவுள்ள ஊசியை தனது மருத்துவ குழுவினருடன்
ப்ரான்கோஸ்கோபி (Bronchoscopy) என்னும் சிகிச்சையின் மூலம் எவ்வித பக்க விளைவுகளும் இல்லாமலும் அகற்றினர்.

மேலும் ஆபரேஷன் செய்யாமல் 3.23 நிமிடத்தில் ஊசியை அகற்றி சிறுமியின் உயிரை காப்பாற்றி உள்ளனர். இதில் டாக்டர்கள் வசந்தகுமார், செந்தில்குமார், மோகன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

RELATED ARTICLES

Recent News