அஜித் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில், குட் பேட் அக்லி படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் தான் தயாரித்து வருகிறது.
இந்த நிறுவனம், தான் அடுத்ததாக தயாரிக்க உள்ள படத்திற்கு, இயக்குநர் அட்லியை ஒப்பந்தம் செய்துள்ளதாம். மேலும், இப்படத்திற்காக, அட்லிக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம்.
இதுமட்டுமின்றி, அட்வான்ஸாக மட்டுமே, பலகோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதனை வைத்து பார்க்கும்போது, அட்லி தான், இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் இயக்குநராக உருவெடுப்பார் என்றும் சினிமா வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.