மழை பிடிக்காத மனிதன் படத்தின் டீசர் வெளியீட்டு விழா, இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், இயக்குநர் விஜய் மில்டன், விஜய் ஆண்டனி, சத்யராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
அப்போது, பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிப்பது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், “அந்த படம் தொடர்பாக என்னை யாரும் அணுகவில்லை. அப்படியே நான் நடித்தாலும், மறைந்த என்னுடைய நண்பர் மணிவண்ணன் இயக்குவதாக இருந்தால், உள்ளது உள்ளபடியே எடுப்பார்.
அவ்வாறு இல்லையென்றால், வெற்றிமாறன், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோர், பிரதமர் மோடி பயோபிக்கை எடுப்பதாக இருந்தால், படம் நல்லா இருக்கும்-னு நினைக்கிறேன்” என்று கூறினார். இவரது இந்த பதில், அங்கிருந்த பலரையும், சிரிப்பில் ஆழ்த்தியது.