இந்தியாவில் சுமார் 85 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் அசைவ உணவை விரும்பி உண்கின்றனர் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
அந்த ஆய்வின்படி இந்தியாவிலேயே நாகலாந்து மாநிலத்தில் தான் அதிகளவில் அசைவம் சாப்பிடுகிறார்கள். அதாவது இந்த மாநிலத்தில் 99.8 சதவீதம் பேர் அசைவம் சாப்பிடுகிறார்கள்.
இந்த பட்டியலில் மேற்கு வங்கம் 2வது இடத்தில் உள்ளது. இங்கு 99.3 சதவீதம் பேர் அசைவம் சாப்பிடுகிறார்கள். மூன்றாவது இடத்தில் கேரளாவும், நான்காகவது இடத்தில் ஆந்திராவும் உள்ளது.
இந்தப் பட்டியலில் தமிழகம் ஆறாவது இடத்தில் உள்ளது. இங்கு 97.65 சதவீதம் பேர் அசைவத்தை விடும்பி சாப்பிடுகிறார்கள்.