பிரதமர் மோடியின் பேச்சுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமாகா மாநில நிர்வாகி கௌதமன், அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கூட்டணி கட்சியான பாஜகவின் செயல்பாடுகள், அதன் தேர்தல் அறிக்கை, அணுகுமுறை எல்லாம் ஜனநாயகத்துக்கு எதிராக உள்ளது என கெளதமன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் பாஜகவுடன் இணைந்து லோக்சபா தேர்தலைச் சந்தித்தது. பாஜகவுடன் கூட்டணி அறிவித்ததுமே தமாகா நிர்வாகிகள் சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒருசில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பாஜக உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமாகா நிர்வாகி கட்சியில் இருந்து விலகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.