அருணாச்சல், சிக்கிமில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

அருணாச்சலில் 60 பேரவைத் தொகுதிகளுக்கும், சிக்கிமில் 32 பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அருணாச்சலம் மற்றும் சிக்கிமில் மட்டும் ஜூன் 2ஆம் தேதியே வாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்தது.

அருணாச்சலில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் முதல்வர் பீமா காண்டு உள்பட 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அருணாச்சலில் பாஜகவும், சிக்கிமில் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சாவும் ஆட்சியை தக்க வைக்கும் என்று வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல், சிக்கிம் மக்களவை தொகுதிகளில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்படவுள்ளது.

RELATED ARTICLES

Recent News