மதுரை முத்து-க்கும் – 2-வது மனைவிக்கும் விவாகரத்து? அதிர்ச்சி தரும் தகவல்!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்துக் கொண்டு பிரபலம் அடைந்தவர் மதுரை முத்து. இவருக்கும், லேகா என்பவருக்கும் திருமணம் நடந்து, இருவரும் வாழ்ந்து வந்தனர்.

ஆனால், கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த கார் விபத்தில் சிக்கி, அவர் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து, லேகாவின் நெருங்கிய தோழியும், மருத்துவருமான நீது என்பவரை, மதுரை முத்து 2-வது திருமணம் செய்துக் கொண்டார்.

இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தொடர்ச்சியாக கவலையாக இருக்கும் வீடியோக்களை நீது வெளியிட்டு வருகிறார்.

அவ்வாறு வெளியிட்ட வீடியோ ஒன்றில், ஒவ்வொரு முறையும் நான் ஏமாந்துக் கொண்டே இருக்கிறேன் என்று அவர் கூறியிருந்தார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், இருவரும் பிரிந்துவிட்டார்களா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News