பஞ்சாப்பில் சரக்கு ரயில் மீது மற்றொரு சரக்கு ரயில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
பஞ்சாப் மாநிலம் சிர்ஹிந்த் அருகில் உள்ள மாதோப்பூர் பகுதியில் இன்று காலை சரக்கு ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தது.
அப்போது அதே தண்டவாளத்தில் வந்த மற்றொரு சரக்கு ரயில், முன்னால் நின்ற சரக்கு ரயிலின் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ரயிலின் லோகோ பைலட்டுகள் இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.