UFO என்பது Unidentified Flying Object என்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் என்று தமிழில் அர்த்தப்படுகிறது.
அதாவது, வானில் ஏதாவது பொருள் பறக்கும் வகையில் இருந்து, என்னவென்று கண்டறிய முடியவில்லையென்றால், அதனை விஞ்ஞானிகள் UFO என்று குறிப்பிடுகிறார்கள்.
இதுதொடர்பான வீடியோ, அவ்வப்போது இணையத்தில் வெளியாகி, ஏலியன்கள் உள்ளதா என்ற கேள்வியை எழுப்பிவிட்டு சென்றுவிடும். அந்த வகையில், தென் ஆப்ரிக்கா நாட்டின் தலைநகரான கேப் டவுன் பகுதியில் உள்ள கட்டிடத்தின் மீது, சிவப்பு நிறத்திலான UFO வடிவிலான புகை மண்டலம் ஒன்று கிளம்பியுள்ளது.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி, பெரும் கவனத்தை பெற்றது.இந்த வீடியோவை பார்த்த ஒருசிலர், இது மிகப்பெரிய நரக குழி என்றும், வேறுசிலர் ஏலியன்களின் வருகைக்கான ஆரம்பம் என்றும், தங்களது மனதில் தோன்றிய விஷயங்களை கமெண்ட்ஸ்களாக பதிவிட்டனர்.
இவ்வாறு தொடர்ச்சியாக பல்வேறு கமெண்ட்ஸ்கள் வந்த நிலையில், நெட்டிசன் ஒருவர் தான் இதற்கான சரியான விளக்கத்தை அளித்தார். இந்த வீடியோவில் இருப்பது, லெண்டிகுலர் மோகம் என்று பதில் அளித்தார்.
அதாவது, மிகப்பெரிய மலையை சுற்றிலும், காற்று ஒரே திசையில் வீசும்போது, இதுமாதிரியான மோகம் உருவாக்கப்படும். இயற்கை எப்போதும் இந்த மாதிரியான அரிய நிகழ்வுகளின் மூலம், அனைவரையும் ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கும்.