குளத்தில் வலையை வீசிய தம்பதி.. கைக்கு கிடைத்த இரும்பு பெட்டி.. திறந்து பார்த்ததும் கிடைத்த இன்ப அதிர்ச்சி..

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ் கெயின். இவரும், இவரது மனைவி பார்பி அகோஸ்தினியும், ஃப்ளஷிங் மெடோஸ் கொரோனா பார்க் பகுதிக்கு, மேக்னெட் பிஷ்ஷிங் செய்ய சென்றுள்ளனர்.

அங்கு இருந்த குளத்தில், தங்களிடம் இருந்த மேக்னட் வலையை அவர்கள் வீசியுள்ளனர். அப்போது, குளத்தின் ஆழத்தில் இருந்து இரும்பு Safety Locker ஒன்று கிடைத்துள்ளது. அந்த லாக்கரை திறந்ததில், அதனுள் ஒரு லட்சம் டாலர் மதிப்புள்ள பணம் கிடைத்துள்ளது.

100 டாலர் கட்டுகளாக, பல்வேறு அடுக்குகளில், அந்த லாக்கரில் பணம் இருந்துள்ளது. இதுகுறித்து ஜேம்ஸ்-ம், பார்பியும், அந்நாட்டு ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளனர்.

அப்போது பேசிய அவர்கள், 100 டாலர் கட்டுக்களாக அந்த Safety Locker-ல் இருந்தது என்றும், இதற்கு முன்பும், நாங்கள் இருவரும் பல்வேறு Safety Locker-களை கண்டெடுத்து இருக்கிறோம் என்றும், கூறினர்.

இதனை ஒரு பொழுதுபோக்காக செய்து வரும் இந்த தம்பதி, இதற்கு முன்னர், பழைய துப்பாக்கிகள், இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட கன்னிவெடிகள், ஒரு முழு மோட்டார் வாகனம், வெளிநாட்டு நாணயங்கள், நகைகள் போன்ற பொருட்களை, எடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News