அயோத்தியை உள்ளடக்கிய தொகுதியில் பாஜக பின்னடைவா? நிர்வாகிகள் அதிர்ச்சி!

கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி அன்று தொடங்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தல், பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு, கடந்த ஜூன் 1-ஆம் தேதி அன்று, 7 கட்டங்களை வெற்றிகரமாக கடந்து, முடிந்தது.

இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி, தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலின் முன்னிலை விவரங்களை பார்க்கும்போது, கட்சி நிர்வாகிகள் சற்று குழப்பத்தில் தான் இருந்து வருகின்றனர்.

அதாவது, அனைத்து கட்சி நிர்வாகிகளும், தங்களது கோட்டை என்று கருதும் இடங்களில், குறைவான வாக்குகளையும், வெற்றி பெறுவது கடினம் என்று கருதும் இடங்களில் அதிகமான வாக்குகளையும் பெற்று வருகின்றனர்.

அதன்படி, பாஜகவின் கோட்டைகளில் ஒன்றாக கருதப்பட்ட அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில், பாஜக வேட்பாளர் லாலு சிங், 4 ஆயிரத்து 791 வாக்குகள் பின்னடைவை சந்தித்துள்ளார்.

இதற்கு முன்னர் 2019-ஆம் ஆண்டு தேர்தலிலும், 2014-ஆம் ஆண்டு தேர்தலிலும், லாலு சிங் தான் போட்டியிட்டிருந்தார். அந்த இரண்டு முறையும், பெருவரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த இவர், தற்போது பின்னடைவு சந்தித்திருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் அஸ்வதேஷ் பிரசாத் மற்றும் சி.பி.ஐ வேட்பாளர் அரவிந்த் சென் ஆகியோர், இவரை எதிர்த்து இந்த தொகுதியில் போட்டியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News