ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் அட்லீ. இதையடுத்து, தெறி, மெர்சல், பிகில் ஆகிய 3 ப்ளாக் பஸ்டர் படங்களை எடுத்திருந்தார்.
தற்போது, பாலிவுட்டிற்கு சென்றுள்ள இவர், ஷாருக்கானை வைத்து, ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தன்னுடைய மனைவி பிரியா, கர்ப்பம் அடைந்துள்ளதாக, தெரிவித்துள்ளார். திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு, பிரியா கர்ப்பம் அடைந்துள்ளதால், நெட்டிசன்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.