2024-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில், நட்சத்திர வேட்பாளர்கள் எவ்வளவு வாக்குகள் பெற்றுள்ளனர் என்பதை தற்போது பார்க்கலாம்?
நரேந்திர மோடி:-
வாரணாசி தொகுதியில், நரேந்திர மோடி போட்டியிட்டார். இந்த தொகுதியில், ஆரம்பத்தில் ஒரு சுற்றில் மட்டும் பின்னடைவை சந்தித்த இவர், தற்போது தொடர்ச்சியாக முன்னிலை வகித்து வருகிறார். இவ்வாறு இருக்க, இவர் 12 மணி நேர நிலவரப்படி, 1 லட்சத்து 69 ஆயிரத்து 924 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
அமித் ஷா:-
கடந்த முறை தேர்தலில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்ற அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். இவர் தற்போது காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இந்த தொகுதியில், 3 லட்சத்து 17 ஆயிரத்து 83 வாக்குகள் பெற்று, இவர் முன்னிலை வகித்து வருகிறார்.
ராகுல் காந்தி:-
கடந்த முறை, வயநாடு, அமேதி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். இதில், வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற அவர், அமேதி தொகுதியில், ஸ்மிருதி இராணியிடம் தோல்வியை பெற்றார். இதன்காரணமாக, தற்போது ரேபரேலி, வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் தற்போது போட்டியிடுகிறார். இதில், ரேபரேலி தொகுதியில், 1 லட்சத்து ஆயிரத்து 481 வாக்குகள் பெற்று, முன்னிலை வகித்து வருகிறார். இதேபோல், வயநாடு தொகுதியிலும், அவர் முன்னிலையில் தான் உள்ளார்.
அகிலேஷ் யாதவ்:-
சமாஜ்வாதி கட்சியின் தலைவரான இவர், இண்டியா கூட்டணிக்கு ஆதரவாகவும், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராகவும் கடுமையான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இவர் இந்த முறை கன்னுஜ் தொகுதியில் போட்டியிட்டார். இந்த தொகுதியில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் இவர், 1 லட்சத்து 19 ஆயிரத்து 289 வாக்குகள் இதுவரை பெற்றிருக்கிறார்.
சுப்ரியா சூலே:-
NCPSP என்ற கட்சியின் சார்பில் போட்டியிட்ட சுப்ரியா சூலே, 40 ஆயிரத்து 398 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.