நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
இந்த வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை விவரங்களின் அடிப்படையில், தற்போது வரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 294 தொகுதிகளிலும், இண்டியா கூட்டணி 232 தொகுதிகளிலும், முன்னிலை வகித்து வருகின்றன.
இதற்கிடையே, ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணியும் நடைபெற்று வருகிறது.
இதில், ஆந்திர பிரதேசத்தில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மறுபுறம், 147 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ஒடிசா மாநிலத்தில, பாஜக 76 இடங்களிலும், பிஜூ ஜனதா தளம் 54 இடங்களிலும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 15 இடங்களிலும், மற்றவை 2 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.