ஒவ்வொரு முறை தேர்தல் நடக்கும்போது, ஒருசில வேட்பாளர்களின் மீது, மீடியாவின் வெளிச்சம் சற்று அதிகமாகவே இருக்கும். அவ்வாறு உள்ள வேட்பாளர்கள் நட்சத்திர வேட்பாளர்கள் என்று அறியப்படுகின்றனர். இந்த ஆண்டும், சில பேர் நட்சத்திர வேட்பாளர்களாக கருதப்பட்டனர். இந்த நட்சத்திர வேட்பாளர்களில், யார்? யார்? பின்னடைவை சந்தித்து இருக்கின்றனர் என்பதை தற்போது பார்க்கலாம்..
- சுப்ரியா சூலே – NCPSP கட்சியை சேர்ந்த சுப்ரியா சூலே, 1 லட்சத்து 43 ஆயிரத்து 686 வாக்குகள் பெற்று, பின்னடைவை சந்தித்து இருக்கிறார்.
- தமிழிசை சௌந்தரராஜன் – பாஜக கட்சியின் மாநில தலைவராகவும், துணை நிலை ஆளுநராகவும் இருந்த தமிழிசை சௌந்தரராஜன், பாஜக சார்பில், தென் சென்னை பகுதியில் போட்டியிட்டார். ஆனால், இவர் வெறும் 57 ஆயிரத்து 858 வாக்குகளை மட்டும் தான் தற்போது பெற்றிருக்கிறார்.
- பன்னீர் செல்வம் – அதிமுகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்து தற்போது அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்த இவர், ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால், இவரும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில், பின்னடைவை சந்தித்து வருகிறார்.
- பொன்.ராதாகிருஷ்ணன் – பாஜகவின் சார்பில், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட இவர், வெறும் 85 ஆயிரத்து 194 வாக்குகள் மட்டுமே பெற்று, பின்னடைவு சந்தித்து வருகிறார்.
- மெகபூபா முஃப்தி – ஜம்மு – காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரான இவர், அனந்த்நாக்-ரஜௌரி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், 2 லட்சத்து 18 ஆயிரத்து 256 வாக்குகள் மட்டுமே பெற்று, பின்னடைவை சந்தித்து வருகிறார்.
- ஸ்மிருதி இராணி – பாஜக சார்பில் அமேதி தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட இவர், அபார வெற்றி பெற்றிருந்தார். இதனால், இந்த முறையும் இவர் வெற்றி பெறுவார் என்று கருதப்பட்டது. ஆனால், 2 லட்சத்து 18 ஆயிரத்து 576 வாக்குகள் மட்டுமே பெற்று, பின்னடைவை சந்தித்து இருக்கிறார்.
- பிரஜ்வல் ரேவண்ணா – வீட்டில் பணிபுரிந்த பெண்களிடம், ஆபாசமாக நடந்துக் கொண்ட வழக்கில் சிக்கியிருந்த இவர், சமீபத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இதனால் பெரும் சர்ச்சையில் சிக்கியிருந்த இவர், 4 லட்சத்து 91 ஆயிரத்து 67 வாக்குகள் பெற்று, பின்னடைவு சந்தித்து இருக்கிறார்.
- அண்ணாமலை – பாஜகவின் தமிழக தலைவராக இருக்கும் இவர், கோவை தொகுதியில் போட்டியிட்டார். நிச்சயம் வெல்வேன் என்று சூளுரைத்த அண்ணாமலை, வெறும் 90 ஆயிரத்து 569 வாக்குகள் மட்டுமே பெற்று, பின்னடைவு சந்தித்து இருக்கிறார்.
- எல்.முருகன் – பாஜகவின் முன்னாள் தமிழக தலைவராக இருந்த இவர், மத்திய இணை அமைச்சராக பதவி வகித்து வந்தார். இதனால், இவர் மீதும் அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், 1 லட்சத்து 45 ஆயிரத்து 21 வாக்குகள் மட்டுமே பெற்று, தொடர் பின்னடைவில் இருக்கிறார்.