நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் பிரதமர் பதவியை நரேந்திர மோடி ராஜினாமா செய்துள்ளார்.
17வது மக்களவையை கலைப்பதற்கான பரிந்துரையை பிரதமர் நரேந்திர மோடி குடியரசு தலைவரிடம் சமர்ப்பித்துள்ளார்.
மக்களவையை கலைத்த பின்னர் மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோர திட்டமிட்டு வருகிறது. ஜூன் 8ம் தேதி பிரதமராக மீண்டும் மோடி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.