நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று வெளியாகியது.
இந்த தேர்தலில் உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இந்தியா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் பாஜக அடைந்த தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று துணை முதல்வர் பதவியில் இருந்து விலக விரும்புவதாக தேவேந்திர ஃபட்னாவிஸ் தகவல் தெரிவித்துள்ளார்.
வரும் தேர்தலில் கடுமையாக உழைக்க வேண்டி அரசு பொறுப்பில் இருந்து விலக விரும்புகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.