ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி பெருவாரியாக வெற்றியடைந்த நிலையில் அந்த வெற்றியை தொண்டர்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு வகைகளில் கொண்டாடி வருகின்றனர்.
மேற்கு கோதவரி மாவட்டத்தில் உள்ள மல்பூர் கிராமத்தை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் டிராக்டர் ஒன்றில் தெலுங்கு தேசம் கட்சியின் பெரிய கொடி ஒன்றை கட்டி அந்த டாக்டரை முன்னும் பின்னுமாக வேகமாக ஓட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அப்போது தொண்டர் ஒருவர் கட்சி கொடியை கையில் பிடித்தவாறு பின்னால் சென்று கொண்டிருந்தார்.
அதே நேரத்தில் டிராக்டரும் ரிவர்ஸ் எடுக்கப்பட்டு பின்னால் வந்து கொண்டிருந்தது.
டிராக்டரை ஓட்டியவர் அந்த தொண்டரையை கவனிக்கவில்லை. எனவே டிராக்டர் அவர் மீது மோதிய நிலையில் கீழே விழுந்த அந்த தொண்டரின் கால்கள் டிராக்டர் சக்கரங்களுக்கு இடையே சிக்கி கொண்டது.
விபத்தில் கால்களில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டு அந்த தொண்டர் துடித்தார்.
அங்கிருந்தவர்கள் டிராக்டர் நகர்த்தி அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.