“வேலுமணியின் கருத்து உண்மை தான்” – அண்ணாமலையின் கருத்துக்கு பதிலடி கொடுத்த தமிழிசை!

நாடாளுமன்ற தேர்தலில், தமிழக அளவில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், நாம் தமிழர் கட்சி ஆகியவை, பிரதானமாக போட்டியிட்டன.

இந்த தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தான் வெற்றி பெற்றிருந்தது. இந்த தேர்தல் முடிவுகள், தமிழக பாஜக அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், இன்று அதிமுகவின் முக்கிய நிர்வாகி வேலுமணி, செய்தியாளர்களை சந்தித்திருந்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவும், பாஜகவும் இணைந்து போட்டியிட்டிருந்தால் நிச்சயம் 30 முதல் 35 இடங்களில் வென்றிருக்கும் என்று கூறியிருந்தார்.

மேலும், அண்ணாமலையால் தான், கூட்டணியில் இருந்து நாங்கள் பிரிந்து வந்தோம் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தனியாக போட்டியிட்டே ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காத அதிமுக, கூட்டணி அமைத்திருந்தால் மட்டும் எப்படி 35 தொகுதிகளில் ஜெயித்திருக்கும் என்று வேலுமணி கூறுகிறார்” என்று தெரிவித்தார்.

மேலும், “வேலுமணி பேசுவதை பார்க்கும்போது, அவருக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே உட்கட்சி பூசல் இருப்பது போல் தெரிகிறது. ஏனென்றால், பாஜக கூட்டணியில் இருந்ததால், சில சட்டங்களை அமல்படுத்த நாங்கள் நிர்பந்திக்கப்பட்டோம் என்று வேறு காரணங்களை தான், பழனிசாமி கூறியிருந்தார். ஆனால், இப்போது வேலுமணி இவ்வாறு சொல்வதை பார்க்கும்போது, உட்கட்சி பூசல் இருப்பதாக தெரிகிறது” என்று கூறினார்.

இவ்வாறு இரண்டு தரப்பினரும், மாறி மாறி குற்றச்சாட்டுக்களை அடுக்கி வந்த நிலையில், இன்று தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில், “வேலுமணி பேசியது உண்மைதான். பாஜகவும், அதிமுகவும் கூட்டணி அமைத்திருந்தால், திமுகவுக்கு இத்தனை இடங்கள் கிடைத்திருக்காது என்பது, கணக்கு ரீதியாக உண்மை தான். திமுக ஒரு இடங்களில் கூட வெற்றி பெறாமல் போயிருப்பதற்கும் வாய்ப்பு இருந்திருக்கும்” என்று கூறினார்.

RELATED ARTICLES

Recent News