புதிய மத்திய அரசின் பதவி ஏற்பு விழா நாளை (ஜூன் 9) டெல்லியில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள சென்னை கோட்ட ரயில்வே பெண் லோகோ பைலட் ஐஸ்வர்யா எஸ். மேனனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா இதுவரை இரண்டு லட்சம் மணி நேரங்கள் வந்தே பாரத், ஜன சதாப்தி போன்ற முன்னணி ரயில்களை இயக்கி உள்ளார்.
ரயில்வே சமிக்ஞைகளை (சிக்னல் ) உடனடியாக உள்வாங்கும் இவரது திறமை ரயில்வே அதிகாரிகளால் பாராட்டு பெற்றுள்ளது.
சென்னை – விஜயவாடா, சென்னை – கோயம்புத்தூர் பிரிவில் துவக்க நாள் முதலே வந்தே பாரத் ரயில்களில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.