வரும் 18 ம் தேதி தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மக்களவை தேர்தல் நிறைவடைந்தது உள்ள நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கும் மாவட்ட ரீதியாக கட்சியின் கட்டமைப்பை வலுபடுத்துவதற்கு தேவையான அறிவுதல்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் வழங்கபட உள்ளது.
மேலும் தொகுதி வாரியான உறுப்பினர் சேர்க்கை மற்றும் தமிழக வெற்றி கழகதின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பூர்வாங்க நடவடிக்கைகள் குறித்தும் அன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கபட உள்ளது.