நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 99 இடங்களை கைப்பற்றியது. உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் பாஜகவை விட இந்தியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டியின் ஆலோசனைக்கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாலை 5.30 மணிக்கு, நாடாளுமன்ற வளாகத்தில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை எம்.பி.க்கள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இதில் ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராகவும், காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழு தலைவராகவும் தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.