காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற்ற செயற்குழு நடைபெற்றது. இதில் இந்தக் கூட்டத்தில், கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த செயற்குழு கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை முன்மொழிந்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்தல் பிரச்சாரத்தின்போது நாம் எழுப்பிய பிரச்சினைகள் பொது மக்களின் கவலைக்குரிய பிரச்சினைகள். அவை எப்போதும் நம் கவனத்தில் இருக்கும். நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியேயும் பொதுமக்களின் இந்தக் கேள்விகளை தொடர்ந்து எழுப்புவோம்.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நமது பணி தொடரும். 24 மணி நேரமும், 365 நாட்களும், மக்கள் பிரச்சினைகளை எழுப்பி மக்கள் மத்தியில் நாம் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.