மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணித்த திரிணாமுல் காங்கிரஸ்

மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்க 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்பதால், பாஜகவுக்கு தனிபெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், கூட்டணி பலத்துடன் பாஜக ஆட்சிஅமைக்கிறது.

டெல்லியில் நாளை நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். குடியரசு தலைவர் மாளகையில் மோடி பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மோடி பதவியேற்பு விழாவில் பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள், தேசிய செயற்குழு உறுப்பினர்கள், எம்.பி, எம்எல்ஏக்கள், மாவட்டத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News