ரஜினி, கமல், பிரபு என்று பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருப்பவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
மார்கெட் குறைந்ததால், சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர், பாகுபலி படத்தில், ராஜமாதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் ஆச்சரியப்படுத்தினார்.
சமீபத்தில் கூட, ஜெயிலர் படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்திருந்தார். இந்நிலையில், 52 வயதாகும் ரம்யா கிருஷ்ணன், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், மாடர்ன் உடையை அணிந்துக் கொண்டு, மிகவும் இளமையான தோற்றத்தில், அவர் காட்சி அளித்துள்ளார்.
இந்த புகைப்படத் தொகுப்பை பார்த்த ரசிகர்கள், நம்ம ராஜா மாதாவா இப்படி ஆயிட்டாங்கள் என்று வித்தியாசமான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.