தங்களது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை, செல்போன் வழியாக, இன்னொருவரின் வங்கிக் கணக்கிற்கு அனுப்புவதற்கு பல்வேறு செயலிகள் உள்ளன. அப்படியான செயலிகளில் ஒன்று தான், பேடிஎம்.
இந்த செயலியை, ஃபைன் டெக் கம்பெணி ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் என்ற நிறுவனம், இந்த செயலியை நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், இந்நிறுவனம் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால், எவ்வளவு பேரை, பணியில் அந்நிறுவனம் தூக்க உள்ளது என்ற தகவல், இதுவரை அறிவிக்கப்படவில்லை. மேலும், இந்த பணிநீக்கத்தால் பாதிக்கப்படுவர்களுக்கு, வேறு ஒரு நிறுவனத்தில் இடமாற்றம் செய்ய, வசதிகள் செய்து தருவதாகவும், அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனத்தின் மனிதவள மேம்பாடு அணி ( HR Department ), பணிநீக்கம் செய்யப்பட உள்ள பணியாளர்களை வேறு ஒரு நிறுவனத்தில் பணியமர்த்த, 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், கூறப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, பணியாளர்களுக்கு இதுவரை வழங்காமல் இருந்த போனஸ் தொகை, வழங்க இருப்பதாகவும், இந்த நெறிமுறையில் வெளிப்படைதன்மை உறுதி செய்யப்படும் என்றும், அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
பேடிஎம் நிறுவனத்தின் PPBL-ஐ இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் தடை செய்திருந்தது. இந்த தடைக்கு பிறகு, அந்நிறுவனத்திற்கு 550 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இந்த நஷ்டத்தால் தான், இந்நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.